சோஷியல் மீடியா மூலம் கள்ளத் தொடர்பு... கண்டித்த கணவனை கொன்ற மனைவி.. சேலத்தில் அதிர்ச்சி

கைது

வயதில் மூத்தவரான பிரபுவை திருமணம் செய்துகொண்டதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும்,  சமூக வலைதளம் பயன்படுத்துவதை பிரபு கண்டித்ததால் தகராறு இருந்து வந்ததாகவும் ஷாலினி தெரிவித்தார்.

 • Share this:
  சேலத்தில் தலையாணையால் அழுத்தி கணவரை கொன்றுவிட்டு நகைப்பறிப்பு  நாடகம் நடத்திய மனைவியை அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

  சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் பிரபு . அதே பகுதியில் வாழை இலை கடை வைத்துள்ள இவர் அவரது சொந்த அக்கா மகள் ஷாலினியை (22) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த திங்களன்று நள்ளிரவில் யாரோ 2 பேர் வந்த நகைகளை பறித்துக் கொண்டதோடு தனது கணவர் பிரபுவை கொலை செய்துவிட்டு  தப்பித்துவிட்டனர் என்று  ஷாலினி, கீழே முதல் மாடியில் இருந்த உறவினர்களிடம்  கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உடனே இருவரும் மேலே சென்று பார்த்தபோது பிரபு உயிரற்று கிடந்துள்ளார்.  மாடிக்கு போகும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளபோது எப்படி திருடர்கள் வரமுடியும் என்று பிரபுவின் பெற்றோர் கேட்டதற்கு ஷாலினி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த பிரபுவின் தாயார் துளசி அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

  உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் சோதனை நடத்தினர். அதில், கொள்ளை சம்பவம் நடைபெற்றதற்கான தடயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து ஷாலினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  இதற்கிடையே, ஷாலினி சமூக வலைதளம் மூலம் பல்வேறு ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாகவும் அதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக பிரபுவின் உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் ஷாலினியின் சமூகவலைத்தள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்த போது திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அப்பு என்கிற காமராஜ் என்பவருடன் ஷாலினி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கியது.

  இதையும் படிங்க: திருச்சியில் இருதரப்பினரிடையே மோதல்: காரணம் மணல் கடத்தலா? மது போதையா?


  இதையடுத்து ஷாலினியிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், தன்னைவிட வயதில் அதிகம் மூத்தவரான பிரபுவை திருமணம் செய்துகொண்டதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும்,  சமூக வலைதளம் பயன்படுத்துவதை பிரபு கண்டித்ததால் அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் ஷாலினிக்கும் காமராஜுக்கும் இடையே கடந்த 1 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததும்  இதற்கு இடையூறாக இருந்ததால் பிரபுவை கொல்ல  இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.

  மேலும் படிக்க: பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள்


  அதன்படி, சம்பவத்தன்று,  பிரபு தூங்கிக்கொண்டு இருந்தபோது தலையாணை கொண்டு அவரது முகத்தில் அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து துறையூர் விரைந்த அம்மாபேட்டை போலீசார் ஷாலினியின் கள்ளக்காதலனை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.  தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

   
  Published by:Murugesh M
  First published: