Home /News /tamil-nadu /

70 அடி கிணறு அருகே புதர்ச்செடிகளை அப்புறப்படுத்திய போது விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்

70 அடி கிணறு அருகே புதர்ச்செடிகளை அப்புறப்படுத்திய போது விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்

விவசாயி மரணம்

விவசாயி மரணம்

20 மணி நேரமாக போராடி கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றி விவசாயின் உடலை  மீட்ட தீயணைப்பு படையினர்.

வாழப்பாடி  அருகே  புதர்ச்செடிகளை  அகற்றிய போது எதிர்பாராத விதமாக  மண்  திட்டு  சரிந்ததால், விவசாயி  கிணற்றுக்குள்  விழுந்து  மூழ்கி  பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  மாவட்டம்  வாழப்பாடி  அருகே  உள்ள  துக்கியாம்பாளையம்  மேலூர் கிராமத்தை சேர்ந்தவர்  பழனி (வயது55). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், அருள்மணி என்ற மகனும், அகிலா, ஆர்த்தி என்ற இரு மகள்களும்  உள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து  பெய்து  வரும்  பருவ மழையால் இவரது  விவசாய கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது, இதனால் கிணற்றை சுற்றி  முளைத்துள்ள  புதர்ச்செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயி  பழனி  நேற்று காலை ஈடுபட்டுள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக  கிணற்றின்  மண்  திட்டு  சரிந்ததால்  கிணற்று  மேட்டில்  நின்று கொண்டிருந்த  விவசாயி  பழனி  மண்  திட்டோடு கிணற்றுக்குள்  விழுந்து மூழ்கி பலியானார்.

இதனைக்கண்ட  இவரது  உறவினர்கள்  வாழப்பாடி  போலீஸார்  மற்றும் தீயணைப்பு  படையினருக்கு  தகவல்  தெரிவித்தனர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  மற்றும்  தீயணைப்புபடையினர், பொதுமக்கள் உதவியுடன்  கிணற்றுக்குள்  விழுந்த  பழனிசாமியை  மீட்கும்  முயற்சியில் ஈடுபட்டனர்.

Also Read:  கோவையில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு - ரயில் ஓட்டுநர்களிடம் விசாரணை

நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியாததால் இரவு முழுக்க கொட்டும் மழையில் 70 அடி  ஆழமுள்ள  கிணற்றில் இருந்த தண்ணீரை  மின் மோட்டார்கள் மூலம் அகற்றி 20 மணி நேர போராட்டத்திற்கு பின்பு விவசாயி பழனியின் உடலை மீட்டனர், பின்னர் போலீசார் பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Death, Death probe, Farmer, Heavy Rainfall, Salem

அடுத்த செய்தி