முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உன் மகன் உயிருக்கு ஆபத்து.. விதவை பெண்ணிடம் நூதன மோசடி - போலி சாமியாரை பிடித்து கொடுத்த மக்கள்

உன் மகன் உயிருக்கு ஆபத்து.. விதவை பெண்ணிடம் நூதன மோசடி - போலி சாமியாரை பிடித்து கொடுத்த மக்கள்

மோசடி நபர் கைது

மோசடி நபர் கைது

பரிகார பூஜை செய்து தருவதாக விதவை பெண்ணிடம் இரண்டரை இலட்சம் ரூபாய் நூதன மோசடி செய்த போலி சாமியாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்

  • Last Updated :

ஆத்தூர் அருகே பரிகார பூஜை செய்து தருவதாக விதவை பெண்ணிடம் இரண்டரை லட்சம் ரூபாய் நூதன மோசடி செய்த போலி சாமியாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா.  கணவரை இழந்த இவர் தனது மகன் பிரவீனுடன் தனியாக வசித்து வருகிறார். பிரவீன் சென்னையில் வேலை செய்து வந்தார்.  பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த பிரவீன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

Also Read:  திருமண ஆசைக்காட்டி பெண்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டல் - கம்பி எண்ணும் மோசடி மன்னன்

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி நிர்மலாவின் வீட்டிற்கு வந்த கோடாங்கி ஜோசியர் உங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது பரிகாரம் செய்தால் மட்டுமே பிழைப்பார் இல்லையெனில் இறந்து விடுவார் என குறி சொல்லியுள்ளார். இதனால் பதற்றமடைந்த நிர்மலா அவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார், அதற்கு கோடாங்கி ஜோசியர் பரிகாரம் செய்தால் உன் மகன் பிழைத்து விடுவார் எனவும் பரிகாரம் செய்ய மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் வீட்டில் வைத்திருக்கும் பணத்தை கொண்டு வா என்று கூறியுள்ளார்.

இதனால் கோடாங்கி ஜோசியரின் ஆசை வார்த்தைகளை கேட்ட நிர்மலா வீட்டில் இருந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து பரிகாரம் செய்யுங்கள் மீதி பணம் 60 ஆயிரத்தை பிறகு தருகிறேன் என சொல்லியுள்ளார்.பணத்தை பெற்று கொண்ட கோடாங்கி ஜோசியர், மீதி பணம் 60 ஆயிரத்தை தந்தால் தான் பரிகார பூஜை செய்யமுடியும் என நேற்று முன்தினம் நிர்மலாவின் செல்போன் எண்ணிற்கு போன் செய்து கேட்டுள்ளார்.

Also Read: கைதியிடம் செல்போன்களைத் திருடச் சொல்லி விற்று வந்த சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது - சென்னையில் பரபரப்பு

மீதி பணம் 60 ஆயிரம் ரூபாய் இல்லாததால் தனது அண்ணன் கனகராஜீடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். உடனே சுதாரித்து கொண்ட கனகராஜ் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஜோசியரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர். அதன்படி நிர்மலா ஜோசியரை ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஜோசியரை மடக்கி பிடித்தனர். அப்போது கோடாங்கி ஜோசியர் சிக்கி கொண்டார் அவருடன் வந்த மற்ற இரண்டு பேரும் தப்பியோடி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து மடக்கி பிடித்த ஜோசியரை கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோடாங்கி ஜோசியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே உள்ள கவுள்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் நாடிமுத்து என்பது தெரியவந்தது.  இவரும் இவரது நண்பர்களும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு சென்று தனியாக இருக்கும் பெண்களிடம் குறி சொல்வது போல் அவர்களை பயமுறுத்தி பரிகாரம் செய்து தருவதாக பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஓதியத்தூரில் உள்ள நிர்மலா என்கிற பெண்ணிடம் பரிகாரம் செய்து தருவதாக இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்தை பெற்று கொண்டு மீதி பணத்தை வாங்க வரும் போது நிர்மலாவின் உறவினர்களிடம் சிக்கி கொண்டதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து கோடாங்கி ஜோசியர் நாடிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Astrology, Astronomy, Cheating, Cheating case, Crime News, Tamil News