ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உணவு கொடுக்க மகள்களுக்கு மனமில்லை..சொத்தை அபகரித்து கொடுமை.. கண்ணீர்வடிக்கும் வயதான தம்பதி

உணவு கொடுக்க மகள்களுக்கு மனமில்லை..சொத்தை அபகரித்து கொடுமை.. கண்ணீர்வடிக்கும் வயதான தம்பதி

வயதான தம்பதியினர்

வயதான தம்பதியினர்

 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்திய மகள்கள் மீது நடவடிக்கை  எடுக்க கோரிக்கை வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சொத்தை அபகரித்துவிட்டு உணவுகூட கொடுக்காமல் மகள்கள் கொடுமைப்படுத்துவதாக சேலத்தை சேர்ந்த வயதான தம்பதிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி காட்டுவளவு சாயபு தோட்டம் பகுதியை சேர்ந்த  வயதான மூதாட்டி பெருமாயி அம்மாள் ( வயது 85 ).  இவரது கணவர்  வெள்ளைய கவுண்டர் ( வயது 95 ). இந்த வயதான  தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.  நடக்க முடியாத தனது கணவரை  சக்கர நாற்காலியில் அமர வைத்து வந்த காட்சி பார்த்தவர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

வயதான தம்பதிகள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் வயதான எங்களை எங்கள் மகள்கள்  கவணிப்பதில்லை, எனவே எங்களிடம் இருந்து எங்கள் மகள்களால் அபகரித்த ஐந்து ஏக்கர் நிலத்தை எங்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also Read: அந்த மனசுதான் சார் கடவுள்.. விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்!

இது குறித்து மூதாட்டி பெருமாயி கூறும்போது, எங்களுடைய பூர்வீக சொத்தான ஐந்து ஏக்கர் நிலம் காரிப்பட்டி =யில் உள்ளது. நீண்ட காலமாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தோம். வயதான எங்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருந்தனர். பின்னர் எனது மகன் இறந்து விட்ட நிலையில், இரண்டு மகள்களும்  அழைத்துச் சென்று, ஏமாற்றி  ஐந்து ஏக்கர் நிலத்தை  செட்டில்மெண்ட் செய்வதாக வாங்கிக் கொண்டனர்.

ஆனால் நிலத்தை வாங்கிய எங்களது மகள்கள் உணவு   கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனது கணவரால் பேசவும் முடியாது நடக்கவும் முடியாத சூழ்நிலையில் நான் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன் என் நிலைமையை கண்டு எங்களது உறவினர்கள் அவ்வப்போது வந்து உணவளித்து வந்தனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த எனது மகள்கள் வீட்டை விட்டு துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

Also Read: ஆசை ஆசையாக இளம்பெண் வாங்கிய ஸ்கூட்டி நம்பர் ப்ளேட்டில் SEX... வண்டியே வேணாம் என முடிவு

இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நாங்கள் வாழ்வதற்கு எங்கள் நிலத்தை விட்டால் வேறு வழியில்லை. எனவே எங்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய எங்கள் நிலத்தை மீட்டு நாங்கள் மீண்டும் நல்லபடியாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பல இடங்களில் பெற்றோரை மகன்கள் கைவிட்டாலும், மகள்கள் பார்த்துகொள்வது வழக்கமாக இருக்கும் நிலையில், மகள்களே பெற்றோரின் சொத்தை அபகரித்து கொண்டு, கைவிட்ட சம்பவத்தால், 95 முதியவரை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு நியாயம் கேட்கும் மூதாட்டியின் நிலையை பார்த்த, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காரிப்பட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

First published:

Tags: Cheating, Couple, Crime News, Property, Salem, Tamil News