• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது வழக்குப் பதிவு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக இருந்து வந்தார். அப்போது, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் 29 வயதான தமிழ்ச்செல்வன்; இவர் பிஈ மெக்கானிக் படிப்பு முடித்துள்ளார்.  இவரது தந்தை குணசேகரன், கஜா புயலின் போது மன்னார்குடி சென்றிருந்த நிலையில் மயில்வாகனன் என்பவர் பழக்கமாகி உள்ளார்.

    மயில்வாகனன் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருபவர் அந்த தொழிலில் சேலம் ஓமலூர் பகுதியில் ஜேசிபி வாகனங்கள் வாங்கி விற்ற பொழுது செல்வகுமார் என்பவர் மயில்வாகனனுக்குப் பழக்கம் ஆகி உள்ளார்.

    செல்வகுமார் மூலமாக முன்னாள் முதல்வரின் உதவியாளர் மணி என்பவர், மயில்வாகனனுக்கு அறிமுகமாகியுள்ளார். மயில்வாகனன், குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வனுக்கு அரசு வேலை தொடர்பாக செல்வகுமாரிடம் கேட்டுள்ளார்.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உதவியாளர் மணி என்பவர் மூலமாக அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து செல்வக்குமாரும் மணியும் 2019ம் ஆண்டு 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை; பணத்தைத் தி ருப்பிக் கேட்டபோது, 4 லட்சம் ரூபாய் மட்டும் மணி திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

    மீதி 13 லட்சம் ரூபாயைத் திருப்பி கொடுக்காமலும் வேலை வாங்கித் தராமலும் மோசடி செய்ததாக தமிழ்ச்செல்வன் கடந்த செப்டம்பர் 26ம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

    சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ புகாரை பெற்று விசாரணை நடத்தியதில் வங்கி கணக்கில் 17 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மணி மற்றும் செல்வகுமார் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தலைமறைவாக உள்ள மணியைப் போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். ஓமலூர், செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வகுமார் என்பவரிடம், மணி 77 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டிருந்தது; ஆனால் அதன் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: