Home /News /tamil-nadu /

பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கருத்துக்கள்: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கருத்துக்கள்: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை மறைக்கும் நோக்கில் உயரமான தோரணவாயில் அமைத்து வருவதாகவும், துணைவேந்தர் அலுவலகத்தில் இருந்த பெரியார் படத்தை நீக்கிவிட்டு, சரஸ்வதி படமும், பகவத்கீதை நூலும் வைக்கப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கருத்துக்களை திணிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம். இங்கு பதவி உயர்வு மற்றும் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதோடு இந்துத்துவா கருத்துக்களை திணிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதாகவும், பெரியாரின் சிலை மறைப்பு,  பெரியார் பெயர் பலகை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து இருந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக கடந்த வாரம் (16-08-2021 அன்று)   பெரியார் பல்கலை கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற இருந்தது. அதற்காக பல்கலை கழக பதிவாளர் பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில்  பெரியார் பல்கலைக்கழக கலைஞர் ஆய்வு மையத்தின் சார்பாக ஆட்சிப்பேரவை கூடத்தில்  வேதசக்தி வர்மக்கலையும் பண்பாட்டுப் பின்புலமும் என்ற தலைப்பில் பேராசிரியர் ந.சண்முகம்  சிறப்புரை நிகழ்த்த உள்ளார் என்றும் மேற்கண்ட நிகழ்விற்கு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பான விளம்பர பதாகையும் பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு: சீமான் விமர்சனம்


இந்த தலைப்பு குறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலை தளங்கள் மூலமாகவும், துணைவேந்தரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டும் எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்தனர். இதனால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக் கழகத்தின் மதவாத சார்பு, சமூகநீதி போக்கை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் பல்கலை கழகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் , ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்கலை கழக போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவிக தலைவர் கொளத்தூர் மணி, அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகள் கூடாது என்ற மத்திய, மாநில அரசுகளின் விதிகளை மீறி ஆயுத பூஜை நடைபெறுவதாகவும், பெரியார் சிலையை மறைக்கும் நோக்கில் உயரமான தோரணவாயில் அமைத்து வருவதாகவும், துணைவேந்தர் அலுவலகத்தில் இருந்த பெரியார் படத்தை நீக்கிவிட்டு, சரஸ்வதி படமும், பகவத்கீதை நூலும் மட்டும் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் மகள்களுக்கு நேர்ந்த கொடுமை!


தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரின் அனைத்து செயல்பாடுகளும் அமைச்சரவையின் ஆலோசனையிலேயே நடைபெற வேண்டும் என்ற அரசியல் சட்ட நிபந்தனைக்கு மாறாக பல்கலைக் கழகங்களில் மட்டும் தனி அதிகாரம் பெற்றிருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பியதோடு, இதை பொது தளங்களில் விவாதமாக்க வேண்டும் என்றும், மாநில சுயாட்சி க்காக குரல் கொடுத்து வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதற்கான முனைப்பை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
Published by:Murugesh M
First published:

Tags: Periyar University, Protest, Salem

அடுத்த செய்தி