• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்

வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்

நிலம் அபகரிக்க முயற்சி

நிலம் அபகரிக்க முயற்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என்றும் மல்லூர் பேரூர் திமுக செயலாளர்சுரேந்திரன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சேலம் மாவட்டம்  மல்லூர் பேரூர் திமுக கழக செயலாளர் கதிர்வேல், திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தை போலீ பத்திரம் மூலம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக பாதிக்கபட்ட  முதியவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 81). திமுக பிரமுகரான இவர், திமுகவில் மல்லூர் நகர துணை செயலாளராக கடந்த 1971 முதல் 1976 வரை பொறுப்பில் இருந்துள்ளார். இவரது தாயார் தங்காயம்மாள் கடந்த 2002ல் அவரது பெயரில் இருந்த நிலத்தை கதிர்வேல் மீது தான கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த இடத்தில் கதிர்வேல் வீடுகட்டி வசித்து வருகிறார். மேலும், அந்த வீட்டின் ஒரு அறையை திமுக கட்சி அலுவலகம் நடத்திக்கொள்ள சுரேந்திரன் என்பவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு வாடகைக்கு கொடுத்துள்ளார்.  சுரேந்திரன் தற்போது திமுகவில் மல்லூர் பேரூர் கழக செயலாளர் என்ற பொறுப்பில் உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக தனது மகள் புனிதசங்கரியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு சிறிய கடை வைத்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தன்னை பார்த்துக்கொள்ள  கதிர்வேல் முடிவு செய்துள்ளார். அதற்காக, சுரேந்திரனுக்கு வாடகைக்கு விட்டிருந்த இடத்தை காலி செய்து தரும்படி கடந்த 7 மாதத்திற்கு முன்பு கேட்டுள்ளார்.

ஆனால், சுரேந்திரன் அந்த இடத்தை காலிசெய்ய மறுத்ததுடன், வாடகையும் தராமல், அந்த இடத்தை முழுவதும் தன்னிடம் கொடுத்துவிட்டு நீங்கள் காலி செய்து விடுங்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கதிர்வேல் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கதிர்வேல்


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிர்வேல், ” எனது இடத்தை தொடர்ந்து காலிசெய்ய கூறி வருவதோடு, சுரேந்திரன் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார். எனக்கு சொந்தமான இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, எனது கையெழுத்தை அவரே போட்டு கிரயம் செய்து விடுவதாகவும்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட  ஒன்றும் செய்ய முடியாது என்னை குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன் என மிரட்டுவதாகவும்”  கண்ணீர்மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்திலேயே ISO தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி சமையல் கூடம்!


தங்களை அங்கிருந்து காலி செய்வதற்காக தினமும் திமுகவினரை வீட்டுமுன் அமரவைத்து நெருக்கடி கொடுத்து வருவதாக கூறிய கதிர்வேலின் மகள் புனிதசுந்தரி, இப்பிரச்சினை தொடர்பாக திமுக பிரமுகர்கள் பலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளாக கூறினார்.

திமுக பிரமுகரின் நிலத்தை திமுக நிர்வாகியே அபகரிக்க முயற்சி செய்வதாக எழுந்த புகார் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: