மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வழங்கி கௌரவித்த தபால்துறை

மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் கொடுத்து அஞ்சல் துறை கெளரவித்துள்ளது.

  • Share this:
இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பெருமை சேர்த்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89மீட்டர் உயரம் தாண்டி அப்போது தங்கம் வென்றவர் மாரியப்பன் தற்போது நடைபெற்ற பாரா ஒலிம்பிக் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இந்தியா திரும்பிய மாரியப்பன் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர், பிரதமர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் பலர் அவருக்கு தொடர்ந்து தொலைபேசி, சமூக வலைதளம் போன்றவை மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய தபால் துறையில் உள்ள இ-போஸ்ட் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் இருந்து 510 இ-போஸ்ட்டுகள் அஞ்சல் துறை மூலம் மாரியப்பனுக்கு வந்துள்ளது.

மாரியப்பன் ஸ்டாம்ப்


இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த உள்ள பெரியவடகம்பட்டி மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனை நேரில் சந்தித்த அஞ்சல் துறையினர் இ-போஸ்டுகளை மாரியப்பனிடம் வழங்கினர். மேலும் மை ஸ்டாம்ப் கொடுக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அஞ்சல் துறையினர் நேரில் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட மாரியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘இந்த மை ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் அளவிட முடியாத சந்தோஷமாகவும் உள்ளது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தமுறை மழையின் காரணமாக தங்கபதக்கம் பெற முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்றும் மேலும் பிரதமர் மோடியைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் பேசிய பின்பு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் ஒரு வேலையில் இறங்குகினால் நம்மால் முடித்துவிட முடியும் என்ற முழு மனதுடன் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: