Home /News /tamil-nadu /

ப்ளஸ்டூ மாணவிக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

ப்ளஸ்டூ மாணவிக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

கராத்தே மாஸ்டர் ராஜா, பள்ளி தாளாளர்

கராத்தே மாஸ்டர் ராஜா, பள்ளி தாளாளர்

ப்ளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தனியார்  பள்ளி கராத்தே மாஸ்டர் பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு மூன்றாண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து  வந்ததால்  மாணவி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

சேலம்  மாவட்டம்  வாழப்பாடி  அருகே  கருமந்துறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்  கராத்தே மாஸ்ட்டராக  சீலயம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 45) என்பவர்  பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ப்ளஸ் டூ மாணவிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மனமுடைந்த மாணவி  பள்ளியின் மேலாளர் ஸ்டீபன் தேவராஜ் என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாணவிக்கு தொடர்ந்து கராத்தே மாஸ்டர் தொல்லை கொடுத்து வந்துள்ளார், இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 22ம்  தேதி  இரவு  வீட்டில் தூக்கிட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Also Read:  திருமணமான பெண்ணை மிரட்டிய போலீஸ்காரர்.. பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்..

இதைப்பார்த்த பெற்றோர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மாணவி நடந்தவற்றை பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் சேலம்  மாவட்ட  எஸ்பி அலுவலகத்தில்  புகார்  கொடுத்தனர். இதன் பேரில்  வாழப்பாடி  டிஎஸ்பி முத்துசாமி தலைமையில்  மகளிர் போலீஸார்  பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவியின் சொந்த ஊர் மக்கள் கராத்தே மாஸ்டரை  நேற்று தேடி பிடித்து  அவரை  சராமாரியாக  தாக்கி  கருமந்துறை பகுதியில் ஊர்வலமாக  கூட்டி  வந்து  கருமந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கராத்தே மாஸ்டரை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய கராத்தே மாஸ்டர் ராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Also Read:  வாடகைக்கு வீடு விட்டது குற்றமா.. ஹவுஸ் ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய தம்பதி

அப்போது பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ்-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Girl students, Karate, Pocso, POCSO case, Police arrested, Private schools, Sexual harassment

அடுத்த செய்தி