Home /News /tamil-nadu /

பெண்ணை கொலை செய்து, நிர்வாணமாக்கி, கல்லை கட்டி கிணற்றில் வீசிய உறவினர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

பெண்ணை கொலை செய்து, நிர்வாணமாக்கி, கல்லை கட்டி கிணற்றில் வீசிய உறவினர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

சிவராஜ்

சிவராஜ்

Salem : சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே, விவசாயின் இரண்டாவது மனைவியை நிர்வாணமாக்கி கை, கால்களை கட்டியதுடன், கல்லை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த வழக்கில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  விவசாயி அசோகன் (வயது 43 ) இவருக்கு  விஜயா(வயது 37 ), செல்வராணி ( வயது 35 ) என்ற  இரண்டு  மனைவிகள். முதல்  மனைவி  விஜயாவுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 16  ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணி என்பவரை அசோகன் இரண்டாவது திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு  15 வயதில்  ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி மாலை அசோகனுக்கும்  இரண்டாவது மனைவி செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, அன்றிரவு செல்வராணி  திடீரென  மாயமானார். இதனிடையே அசோகனின்  விவசாய தோட்டத்தின் அருகிலுள்ள பாபு என்பவரது தோட்டத்தின் கிணற்றில் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக வீரகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் டிஎஸ்பி, ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் நிர்வாணமாக கை, கால், கட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த அசோகன் இது தனது 2 வது மனைவி  செல்வராணிதான் எனவும், முதலில் பார்த்த போது  சரியாக அடையாளம்  தெரியவில்லை எனவும்  போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் செல்வராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து செல்வராணியின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் ஆனந்தமுருகன் போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

செல்வராணியின் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் அந்த எண்களை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அசோகன் சகோதிரியின் கணவர் சிவராஜ் வெள்ளையூர் வி.ஏ.ஓ. விடம் சரணடைந்தார். இதனையடுத்து சிவராஜ் வீரகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Read More : மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை.. சென்னையில் சிக்கிய கும்பல் - போலீஸார் தீவிர விசாரணை

போலீசார் சிவராஜிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்கு மூலம் வெளியாகியுள்ளது.  பூர்வீக சொத்தில் எனது மனைவி ராசாத்திக்கு எதுவும் கொடுக்காமல் தனது மைத்துனர் அசோகன் 7 ஏக்கர் நிலைத்தை அவரது இரண்டு மனைவிகளுக்கு எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 31 ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டை விட்டு வெளியேறிய செல்வராணி இரவு நேரத்தில் தனியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து நியாயம் கேட்டதால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Must Read : காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்... மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - திண்டுக்கல்லில் பரபரப்பு

அப்போது என்னை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் கையில் இருந்த கட்டையால் அவரது மண்டையில் தாக்கினேன், இதில் மயங்கி விழுந்த அவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார், இதனால் பயந்து போன நான் அவரது சேலை, ஜாக்கெட்டை கழற்றி கை, கால்களை கருங்கல்லால் கட்டி அருகில் உள்ள சரவணன் என்பவரின் விவசாய தோட்டத்து கிணற்றில் தூக்கி வீசி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். இந்நிலையில், தற்போது போலீசார் என்னை நெருங்குவதை அறிந்து சரணடைந்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read : நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டம்.. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீசியது போல் காண்பிப்பதற்காக, உடலை நிர்வாணமாக்கி கிணற்றில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது, இதனையடுத்து சிவராஜ் மீது வீரகனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Murder, Salem

அடுத்த செய்தி