சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி ஏரியை 98 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழக நகர்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ,சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரியை அமைச்சர் நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஏரியில் படர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாகவும் நடைபாதையை சீரமைத்து அப்பகுதியை மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பனமரத்துப்பட்டி ஏரியை 98 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.