ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளச்சாராயம் விற்பனை... ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கள்ளச்சாராயம் விற்பனை... ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சாராயம் விற்பனை

சாராயம் விற்பனை

Salem Attur : சட்டவிரோதமாக நடைபெறும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள்  போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். இந்நிலையில், செல்லியம்பாளையம் குடியிருப்பு பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் சந்து டையில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் படுஜோராக விற்பனை நடைபெற்று  வருவதாக  கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில்  புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் குடிமகன்கள் மது அருந்துவிட்டு போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபடுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியோர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கு துணை போகும் போலீசாரை கண்டித்து செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆத்தூர் டிஎஸ்பி  அலுவலகத்தை முற்றுகையிட்டு  மனு  அளித்தனர்.

பின்னர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம்  கூறும்போது, தங்கள்  பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து ஆத்தூர் நகர  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினரும்  நடவடிக்கை  எடுப்பதாக  உறுதி  அளித்தனர்.

புகார் அளித்த பொதுமக்கள்

Must Read : திடீரென பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் (படங்கள்)

ஆனால், புகார் அளித்த பின்பு தான் அதிக அளவில் சாராய  விற்பனை நடைபெற்று வருவதாகவும் போலீசார்  நடவடிக்கை  எடுக்காமல்  இருப்பதால் ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில்  மனு  கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் சாராய  விற்பனையில் ஈடுபடும்  நபரால் பல்வேறு  பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், ஆத்தூர் டிஎஸ்பியும் உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலைமறியல்  போராட்டத்தில்  ஈடுபடப்  போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Protest, Salem