சேலத்தில் தார் சாலை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சி 31 ஆவது வார்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் சாக்கடை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால். அங்கே தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 31 ஆவது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சையது மூசா தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அப்பகுதியில் ஒன்று திரண்டு உடனடியாக சாலையை போடும்படி வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இரு தரப்பினரிடையே மோதல்
Must Read : இங்கெல்லாம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினருமிடையே பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - திருமலை, சேலம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.