• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அ.தி.மு.க ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் - சேலம் ஆட்சியரிடம் ஊராட்சி பெண் தலைவர் புகார்

அ.தி.மு.க ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் - சேலம் ஆட்சியரிடம் ஊராட்சி பெண் தலைவர் புகார்

சேலம் ஆட்சியரிடம் புகார்

சேலம் ஆட்சியரிடம் புகார்

சேலத்தில் பெண் ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்தி வரும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சேலம் அயோத்தியாப்பட்டினம் பகுதியில் உள்ள மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேகலா தேவேந்திரன் என்ற பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த அருண் குமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். அதிமுகவை சேர்ந்த துணை ஊராட்சி மன்றத் தலைவர் அருண்குமார் நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு பெட்டியை உடைத்து செல்லாத வாக்குகளை செல்லும் வாக்குகளாக மாற்றி அறிவிக்க கோரி அராஜகத்தில் ஈடுபட்டு துணைத் தலைவராக பதவியேற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணி செய்ய விடாமலும் அவர்களை மிரட்டி அச்சுறுத்தி வருவதாகவும், பெண் ஊராட்சி மன்றத் தலைவர் என்று கூட பாராமல் என்னைப் பலமுறை ஆவேசமாகவும் நாகரீகமற்ற முறையிலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடந்துகொள்வதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மேகலா தேவேந்திரன் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அதிமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கும் தனது கணவருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள அருண்குமார் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வாக்கு எண்ணும் அறையில் செல்லாத வாக்குகளை தனது கணக்கில் சேர்த்து வெற்றி பெற்ற நபர்தான் இவர். தற்போது ஊராட்சி பகுதியில் ஒரு பணிகளையும் செய்ய விடாமல் அனைவரையும் அச்சுறுத்தும் தொனியில் மிரட்டி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து இவரின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: