‘விடுங்க சார்..ஐயோ அடிக்காதீங்க’ - சோதனை சாவடியில் வியாபாரி முருகேசனை போலீஸ் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

முருகேசனை போலீஸார் தாக்கும் காட்சிகள்

சேலம் அருகே சோதனைசாவடியில் போலீசார் தடியால்  தாக்கியதில்  முருகேசன் என்பவர் உயிரிழப்பு...உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது ந?

  • Share this:
சேலம் அருகே சோதனைசாவடியில் போலீசார் தடியால்  தாக்கியதில்  முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை,உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.

Also Read: கேரள இளம்பெண் மரணம்.. கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர்..வாட்ஸ் அப் சாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ  மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையில் இருந்த இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவரை பிரம்பால் தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து முருகேசனை போலீசார் பிரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் போலீசார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பினவறையில் வைக்கப்பட்டுள்ளது. முருகேசனின் உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் நேரில் வந்து, சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறி சமாதானம் செய்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: