Home /News /tamil-nadu /

டெஸ்ட் ரெய்டு, புல்லட் திருட்டு... எஸ்கேப்பான காதல் ஜோடிக்கு இறுதியில் ட்வீஸ்ட்

டெஸ்ட் ரெய்டு, புல்லட் திருட்டு... எஸ்கேப்பான காதல் ஜோடிக்கு இறுதியில் ட்வீஸ்ட்

டெஸ்ட் ரெய்டு, புல்லட் திருட்டு... எஸ்கேப்பான காதல் ஜோடிக்கு இறுதியில் ட்வீஸ்ட்

டெஸ்ட் ரெய்டு, புல்லட் திருட்டு... எஸ்கேப்பான காதல் ஜோடிக்கு இறுதியில் ட்வீஸ்ட்

Couple Bullet Theft | சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.  இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி  இரண்டு  இளம் ஜோடியினர் வந்துள்ளனர் . புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த பைக்குகளை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 1.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு  பைக்கை தேர்வு செய்துள்ளனர். பின்னர் வண்டியை , ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர் . நீண்ட நேரம் ஆகியும் பைக்கை ஓட்டி சென்ற காதல் ஜோடி  திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ‘ அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது ' என்றும் , ' நாங்கள் தனியாக வந்துள்ளோம் ' என்றும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ராம்பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்த்து,  இரண்டு ஜோடிகளுக்கும்  தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது,  வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர் .

அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர் . போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் பெயர் பிரவின்குமார் என்பதும், கர்நாட மாநிலம் பங்காரு பேட்டையை சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது .வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read : இந்த சிலை மட்டும் உங்கக்கிட்ட இருந்தா சக்கரவர்த்தியா இருப்பிங்க... சதுரங்க வேட்டை மோசடி அம்பலமானது எப்படி?

இது குறித்த புகாரின்பேரில்  முதலில் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டிய  டவுன் குற்றப்பிரிவு போலீசார், வண்டி விற்பனை செய்யபட்டுள்ளதாகவும், இது திருட்டு வழக்கு அல்ல என்றும் கூறி வந்தனர். இதனையடுத்து மாநகர காவல்  ஆணையரிடம் ராம்பாலாஜி புகார் கொடுத்தார்.

இதனையடுத்து மார்ச் 8-ம் தேதி சேலம் நகர குற்றப்பிரிவில் மோசடி (420) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை பெங்களூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாமிட்டு தேடி வந்தபோதும் திருட்டு காதல் ஜோடியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் 19-ம் தேதி கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் அருகே  கோலார் பகுதியில் வாகண சோதனையில் காமசமுத்திரம் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக புல்லட்டில் வந்த காதல் ஜோடியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்துள்ளனர். விசாரணையில் இது திருட்டு வண்டி என்பதும், வாகன எண்ணை மாற்றி உலா வந்ததும் தெரியவந்தது.  இதனையடுத்து புல்லட் பறிமுதல் செய்து, பிரவீனை சிறையில் அடைத்தனர்.

மார்ச் 25 ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த பிரவீன்,  தனது காதலியை காண சேலம் பொன்னமாபேட்டை வந்த தகவலை அறிந்த சேலம் நகர குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த காதல் ஜோடியை  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : சக மாணவர்களை துரத்தித் துரத்தி துடைப்பத்தால் தாக்கிய மாணவர்

விசாரணையில் சேலம் காந்திரோடு பகுதியில் உள்ள உயர்தர உணவகம் ஒன்றில் பிரவீன் மேற்பார்வையாளராகவும், ப்ரீத்தி கேஷியராகவும் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே சேலம் கருப்பூர் பகுதியில் புல்லட் திருடிய வழக்கில் காவல் துறையில் பிடிபட்டு, பின்னர் விடுதலையாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மீண்டும் புல்லட்டின் மீது ஏற்பட்ட காதலால் தவறு செய்து விட்டதாக ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் காதலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஆனாலும் புகார் கொடுத்தபோது ஆரம்பத்தில் சேலம் நகர குற்றப்பிரிவு போலீசார் மெத்தனம் காட்டியதால், புல்லட் தற்போது கர்நாடக போலீசாரிடமே உள்ளது. எவ்வளவு மூயன்றும் புல்லட் கிடைக்காத வருத்தத்தில் உள்ளார் கடை உரிமையாளர் ராம்பாலாஜி.
Published by:Vijay R
First published:

Tags: Crime News, Salem

அடுத்த செய்தி