டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரேசில் தலைநகர் ரியோவில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் உரையாடினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது மாரியப்பன் பெங்களூருவில் உள்ளார். பிரதமர் உடனான உரையாடலில் மாரியப்பன் மற்றும் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகிலுள்ள பெரியவடகம்பட்டி யில் வசிக்கும் மாரியப்பனின் தாயார் சரோஜா,தம்பிகள் குமார், கோபி ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது மீண்டும் தங்கப் பதக்கம் வெல்ல மாரியப்பனுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார்.
மாரியப்பன் பேசும்போது, சிறு வயது முதல் தான் கஷ்டப்பட்டு படித்ததாகவும், விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலும் பயிற்சி எடுத்தேன். உயரம் தாண்டுதலில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட சாய் விளையாட்டு விடுதி அதிகாரிகள் எனக்கு பயிற்சி அளித்தனர். இதனால் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெறமுடிந்தது என்றும், அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேறி உள்ளேன் என்றும் கூறினார். மாரியப்பனை பாராட்டிய மோடி, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து சேலம் பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பனின் தாயார் சரோஜா, பிரதமர் மோடியிடம் பேசும்போது, இந்தியா மீண்டும் தங்க பதக்கம் என் மகன் மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக்கொள்கிறேன் என்றார். அதற்கு பிரதமர், நல்ல பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதுடன், மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார்? என்று மோடி கேட்க அதற்கு சரோஜா, தனது மகன் நாட்டுக்கோழி மற்றும் சூப் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார் என்றார்.
இதையும் படிங்க: மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் பிடிஆர்
"உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று வாழ்த்திய மோடி, மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும் என அவரது சகோதரர் குமாரிடம் கேட்டார். அதற்கு அவர், " மேலும் பல பரிசுகளை இந்தியா பெறவேண்டும்" என விரும்புவதாக கூறினார். மற்றொரு சகோதரர் கோபியிடம் வணக்கம் என்று கூறிய பிரதமர் மோடி, உங்கள் மனதில் என்ன உள்ளது என்று கேட்டார்.
அதற்கு கோபி, "மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும்" என்றார். மாரியப்பன்போல் தாங்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்" என்று மோடி அறிவுரை வழங்கினார்.
மேலும் படிக்க: டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் - அமைச்சர் பிடிஆர்
மீண்டும் மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, “ மாரியப்பன் மீண்டும் உன்னை பாராட்டுகிறேன். உனது தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன்" என்றார். "தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக மாரியப்பனின் இல்லத்திற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.