மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் சென்னையில் கோட்டையில் குடியேறும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாற்றுதிறனாளிகள் சென்னை சென்றனர்.
அதன்படி, சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழும்பூர் பயணிகள் ரயில் வண்டியில் சென்னை செல்ல முற்பட்டனர். ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட முயன்ற இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரயில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சேலம் சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்த காரணத்தால் மாற்றுத்திறனாளிகள் கலக்கத்திற்கு உள்ளாகினர்.
கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000; அதிக பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது மாற்றுதிறனாளிகள் முன் வைக்கும் பிரதான கோரிக்கையாகும்.
Must Read : மெழுகுவர்த்தியில் தொடங்கிய வாழ்க்கை பெரு வெளிச்சத்தை காணப் போகிறது - மகிழ்ச்சியில் நரிக்குறவர் இனமக்கள்
தமிழகத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு கண்டு கொள்ளவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
செய்திளாளர் : திருமலை, சேலம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Physically challenged, Protest, Salem, Train