முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் பொதுமக்கள்.. நூதன முறையில் போராட்டம்

15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் பொதுமக்கள்.. நூதன முறையில் போராட்டம்

பாதிக்கப்பட்ட மக்கள்

பாதிக்கப்பட்ட மக்கள்

Salem District | 15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் சேலம் மக்கள்...மெழுகுவர்த்தி ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெழுகுவர்த்தி ஏந்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஸ்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் பல கட்ட மனு வழங்கும் போராட்டம் என பல்வேறு வகையில் போராடி வருகின்றனர் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பட்டா வழங்க கோரியும் பட்டா இல்லாததால் 15 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில் நாங்கள் இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் 100 முறைக்கு மேல் மனு வழங்கியிருக்கிறோம் போராட்டங்களை நடத்தியுள்ளோம் அரசு மாறி மாறி வருகிறது ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மின்சாரம் இல்லாததால் பள்ளி குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தம் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்கி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

First published:

Tags: Electricity, Protest, Salem