ஆத்தூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை.. தொடர்ந்து உயிழப்புகள் ஏற்படும் அவலம்

ஆத்தூர்

ஆத்தூர்  அரசு  தலைமை  மருத்துவமனையில்  போதிய படுக்கை  வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடர்ந்து உயிழப்புகள் ஏற்படும் அ

  • Share this:
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு கொரோனா சிகிச்சை பிரிவில் 76 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் தொற்று அறிகுறிகளுடன் 128 படுக்கை வசதிகளுடன் இருக்கும் இடத்தில் 185 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு கடந்த 21 நாட்களில் 1494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை 21 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றிற்கு 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தொற்று அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடி மற்றும் சிமெண்ட்  தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதோடு அவர்களுக்கு  அரசு  சார்பில் எவ்வித பொருட்களும் வழங்கப் படவில்லை என கூறபடுகிறது.

இதனால் வீட்டில்  இருந்து  எடுத்து வரப்பட்ட  பெட்சீட், கட்டிலை கொண்டு வந்து படுத்து சிகிச்சை பெற்று வரும் அவல நிலை நீடித்து வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு  திடீர் மூச்சுத்திணறல்  ஏற்பட்டால் அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளின்  உறவினர்களே ஆக்சிஜனை கொண்டு வந்து சிகிச்சை அளித்து வரும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அதோடு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு குவிந்து வரும் நோயாளிகளை மருத்துவர்கள் அலைகழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்க... Egg Price | முட்டை விலை ஒரே வாரத்தில் கிடுகிடு உயர்வு

எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கி நோயாளிகளை குணப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: