நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை; கொரோனா நோயாளிகளுடன் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் பல மணி நேரம் காத்திருப்பு!

வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்

உயிருக்கு போராடி வந்த நோயாளிகளை மருத்துவர்களும் கவனிக்காததால், அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்தனர்.

  • Share this:
சேலம் அரசு மருத்துவனையில் படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகளுடன் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வெளியிலே பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், மருத்துவர்களும் கவனிக்காததால், அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் தினசரி 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இப்படி தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் கிடைக்கமால், நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பது பெரும் கடினமாக உள்ளது.

உயிரிழந்தவர்கள் கேட்பாரற்று தரையில் கிடக்கும் அவலம்.


இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளிகள் பல மணி நேரமாகியும் மருத்துவமனைக்கு வெளியிலே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. இதனால், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு வெளியில் நீண்ட நேரமாக நோயாளிகளுடன் காத்திருந்தன.

உயிருக்கு போராடி வந்த நோயாளிகளை மருத்துவர்களும் கவனிக்காததால், 20 வயது இளம்பெண், 40 வயதுக்கு மேற்பட்ட மூன்று ஆண்கள் என நான்கு நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த நபர்கள் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையும் சேலம் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.
Published by:Esakki Raja
First published: