முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - காவல்துறையினர் அறிவிப்பு

ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - காவல்துறையினர் அறிவிப்பு

ஏற்காடு

ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை  விதித்து  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி உத்தரவிட்டுள்ளார். 

  • Last Updated :

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடா வருடம் புத்தாண்டு தின கொண்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டாண்டு தினத்திற்கு முன்பே வந்து ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி அன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று அதிக அளவில் இருந்ததால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர அரசு தடை விதித்திருந்ததால் ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் எதுவும் நடக்க வில்லை. எனவே இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்  மீண்டும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி  இன்று  மாலை ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை ஏற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து  ஏற்காட்டில் எந்த தங்கும் விடுதிகளிலும் புத்தாண்டு  கொண்டாட நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.

அவ்வாறு கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் செய்திருந்தால் இரவு 11 மணிக்குள் அமைதியான முறையில் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் இரவு 11 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் வெளியில் சுற்றி திரியாதவாறு தங்கும்  விடுதி நிர்வாகத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார் . மேலும்  இனி வரும் நாட்களில் வாகன நிறுத்தங்களை  தவிர சாலையோரம் மற்றும் வேறு எங்காவது போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனகளை பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேபோல், மது போதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்களது தங்கும் விடுதிகளில்  தங்க அனுமதிக்க வேண்டாம் என்று விடுதி மேலாளர்களிடம்  கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து சேலம்  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி செய்தியாளர்களிடம்  கூறும்போது,  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மற்றும் ஓமைக்ரான் நோய் தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவது புத்தாண்டு கொண்டடாட்டதிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும்  புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயனிகள் அதிக அளவில் வருவதால் நோய் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது.

top videos

    அதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தக்கூடாது, மேலும் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் இரவு 11 மணிக்கு மேல் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: New Year, New Year 2022, New Year Celebration, Salem