Home /News /tamil-nadu /

சேலம் மேயருக்கு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரை அறிவித்த தி.மு.க- கட்சியினர் வரவேற்பு

சேலம் மேயருக்கு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரை அறிவித்த தி.மு.க- கட்சியினர் வரவேற்பு

சேலம் மேயர்

சேலம் மேயர்

சேலம் மாநகராட்சி மேயராக விவசாய குடும்பத்தை சேர்ந்த பகுதி கழக செயலாளர் ராமசந்திரன் அறிவிக்கபட்டதை தொடர்ந்து திமுகவினர் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

சேலம் மாநகராட்சியில் 46  இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் இடத்தை திமுக பெற்றுள்ளது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் இருவரும் திமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் திமுக உறுப்பினர்களின் பலம் 48 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி மேயர் பொறுப்பிற்கு சேலம் அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளரான 6 கோட்டத்தில் வெற்றி பெற்ற ராமச்சந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கிளைக் கழக உறுப்பினர் பதவியில் தொடங்கி கிளைக் கழகச் செயலாளர், பகுதி கழக பொருளாளர், தற்போது பகுதி கழக செயலாளராக பதவி வகித்து வரும் 77 வயதான ராமச்சந்திரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். இந்த நிலையில் மேயர் போன்ற உயர் பொறுப்பில் பகுதி கழக நிர்வாகி ஒருவருக்கு திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரனுக்கு மீனாட்சி என்ற மனைவியும் சுதர்சன் பாபு என்கிற மகனும் சுமித்ரா என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மேயர் வேட்பாளராக அறிவிக்கபட்டவுடன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் மேயர் வேட்பாளர் அறிவிப்பிற்கு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே, சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, துணை மேயராக காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கபட்டு உள்ள மாமன்ற உறுப்பினர் சாரதாதேவி சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

துணை மேயர், நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ம.தி.மு.க

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் படி, செயல்பட்டு, சேலம் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, Salem

அடுத்த செய்தி