ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

120 அடியை எட்டிய மேட்டூர் அணை..16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

120 அடியை எட்டிய மேட்டூர் அணை..16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகால அணை வரலாற்றில்  41 ஆண்டாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடப்பாண்டு முதல் முறையாக மேட்டூர் அணை  120 அடியை எட்டியுள்ளது. 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை முதலே அதிகரித்து வந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை இரவு 11:35 மணிக்கு எட்டியது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகால அணை வரலாற்றில்  41 ஆண்டாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு   அணை முழு கொள்ளளவை எட்டியது.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மேட்டூர் அணை நீர் மட்டம் 119 அடியாக இருக்கும் போது  அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக உபரி நீர் வெளியேற்றிவந்தனர்.

தற்போது 120 அடியை எட்டியுள்ள நிலையில் 16 கண் பாலம் வழியாகவும்  உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையிலிருந்து உபரிநீராக  வினாடிக்கு 24,000 கன அடியாக திறக்கப்படுகிறது.  இதில் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,000 கன அடியும், 16- கண் மதகு வழியாக 2,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் மூலம் 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Heavy rain, Mettur, Mettur Dam, Salem, Water