தமிழகத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழைபெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முந்தினம் முதல் நேற்றைக்கு முந்தையநாள் காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியப் பகுதிகள் பலவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.
இதற்கிடையில், நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் மேட்டூர் அணை உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று( 08.11.2021 இரவு 8.00 மணியளவில் 118.32 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 09.11.2021 காலை 5.00 மணியளவில் 119.00 அடியை எட்டும் என்றும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் முதற்கட்டமாக 5,000 கனஅடி திறந்துவிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Mettur Dam