சேலம் : இறைச்சி கடைகளை உடனடியாக மூடச் சொன்னதால் அதிகாரிகள், வியபாரிகள் வாக்குவாதம்

கோப்பிப் படம்

சேலம் சூரமங்கலத்தில் மாநகராட்சி உத்தரவை அறியாமல் மீன் கடைகளை வியாபாரிகள் திறந்த நிலையில், அதிகாரிகள் உடனடியாக கடைகளை மூடச் சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 • Share this:
  சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய இரு இறைச்சி மற்றும் மீன் சந்தைகளுக்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கக் கூடிய வஉசி மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டும், சேலம் சூரமங்கலத்தில் இருக்கக் கூடிய மாநகராட்சி மீன் விற்பனை அங்காடி ஆகிய 2 சந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும், மறு அறிவிப்பு வரும் வரை கடைகளை திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

  இதனை அறியாத சூரமங்கலம் மீன் விற்பனை அங்காடி வியாபாரிகள் கடைகளைத் திறந்துள்ளனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கடைகளை அடைக்க உத்தரவிட்டபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஏராளமான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவை விற்பனையாகவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

  மேலும் படிக்க... மத்திய அரசின் அறிவுறுத்தலால் ரெம்டெசிவிர் மருந்தின் விலை பெருமளவு குறைப்பு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: