Home /News /tamil-nadu /

பருவம் தவறிய மழையால் மாம்பழம் விளைச்சல் பாதிப்பு - விலை இரு மடங்காக உயர்வு!

பருவம் தவறிய மழையால் மாம்பழம் விளைச்சல் பாதிப்பு - விலை இரு மடங்காக உயர்வு!

மாம்பழம்

மாம்பழம்

TN Mango Cultivation | இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையால் மாமரங்களில் பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாக நடப்பாண்டு மாம்பழ விளைச்சல் சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
பருவம் தவறிய மழையால் மாமரங்களில் பூக்கள் உதிர்ந்து, நடப்பாண்டு மாம்பழம் உற்பத்தி 50 சதவீதம் சரிந்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்தாலும், மாம்பழங்களை வழங்க முடியாத நிலை இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மாம்பழம் உற்பத்தியில் முக்கிய இடம் தமிழகத்துக்கு உண்டு. குறிப்பாக சேலத்து மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. இங்கு பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த், நடுசாளை, குதாதத் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைகின்றன.

இங்கு உற்பத்தி ஆகும் மாம்பழங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையால் மாமரங்களில் பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாக நடப்பாண்டு மாம்பழ விளைச்சல் சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதமாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு தமிழகம் முழுவதும் மாமரங்களில் விளைச்சல் இல்லை. வெயில் காரணமாக மாம்பழங்களின் அளவும் சிறிதாகவே இருக்கிறது. வழக்கமாக தற்போது சீசன் உச்சத்தை தொட்டு விற்பனை அதிகரிக்க வேண்டிய நிலையில் மழையால் வரத்து சரிந்துள்ளது.

இதனால் மாம்பழம் கேட்டு ஆன்லைன் ஆர்டர்கள் குவிந்து வரும் போதிலும், வழங்க முடியவில்லை என்றும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பத்து டன் மாம்பழ வணிகம் நடந்த நிலையில், தற்போது இரண்டு டன் கூட வியாபாரம் இல்லை எனவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Also read... Gold Rate: குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 19. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு சீசன் நாட்களில் விற்கப்பட்ட விலையைவிட 50 முதல் 100 விழுக்காடு கூடுதலான விலைக்கு தற்போது மாம்பழங்கள் விற்கப்படுகின்றன. அதனால் மாம்பழம் வாங்க வாடிக்கையாளர்கள் இடையே போதிய ஆர்வம் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் காலத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பார்சல் மூலம் தமிழர்கள் வசிக்கும் வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். நடப்பாண்டு உள்ளூர் மக்கள் தேவைக்கே மாம்பழம் போதவில்லை என்பதால் ஏற்றுமதி குறையவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஆர்டர் கேட்கும்போது இங்கு விலை மேலும் அதிகரிக்கும், அபாயம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mango, Salem

அடுத்த செய்தி