Home /News /tamil-nadu /

திருமணமான கையோடு மணப்பெண்ணுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

திருமணமான கையோடு மணப்பெண்ணுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

மணப்பெண்ணுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

மணப்பெண்ணுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

Salem | DMK | Local Body Election | திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாந்தமூர்த்திக்கும், கலையரசி என்பவருக்கும் இன்றைய தினம் திருமணம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி தேர்தலில் திருமணமான கையோடு மணப்பெண்ணுடன் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் பிரச்சராத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 14வது கோட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாந்தமூர்த்திக்கும், கலையரசி என்பவருக்கும் இன்றைய தினம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருமணமான கையோடு மணப்பெண் கலையரசியுடன்  தான் போட்டியிடும் 14வது கோட்டத்திற்குட்பட்ட வின்சென்ட், குமாரசாமிபட்டி, அங்கம்மாள் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Also Read : தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

அப்போது கணவருக்கு ஆதரவாக மனைவியும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்.  தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் மணக்கோலத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, Local Body Election 2022, Salem

அடுத்த செய்தி