தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையில் அதனை நம்பி வாழும் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வு ஒலியும், ஒளியும் இன்றி ஆடி, காத்தாடி போயுள்ளது.
தமிழ்நாட்டில் ஆடி மாதம் பிறந்தாலே கோயில் திருவிழாக்களுக்கு பஞ்சம் இருக்காது. மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுப்பது, முத்தாலம்மனுக்கு முளப்பாரி தூக்குவது என திருவிழாக்கள் களைகட்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோயில் திருவிழாக்களின் போது மின்னி, மின்னி மறையும் மின்விளக்குகளால் வீதியெல்லாம் விழாக் கோலம் பூண்டிருக்க செய்வதில் முக்கிய பங்காற்றுபவர்கள் ஒலி, ஒளி அமைப்பாளர்கள். பல தெய்வங்களின் உருவத்தில் மின்விளக்குகளை மிளிரவைத்து திருவிழாவை தித்திக்க செய்பவர்கள் இவர்கள்தான். ஒலிபெருக்கி, மைக் செட், வண்ண தோரணங்களுடன் கூடிய பந்தல், மின் விளக்குகள் இவைகள் இல்லாத திருவிழாக்களே இருக்க முடியாது.
திருவிழாக்கள் மட்டுமல்லாது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் பணி இன்றியமையாததாக இருந்து வருகிறது.
Also read: New Ration Card : 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டை பெறலாம்... என்னென்ன ஆவணங்கள் தேவை!
இதுபோன்று பல்வேறு திருவிழாக்களுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் மின்னொளி மூலம் வெளிச்சத்தை பாய்ச்சிய ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வு தற்போது கொரோனா ஊரடங்கால் வெளிச்சமின்றி இருண்டு போயுள்ளது.
பொதுவாக ஆடிமாதம் என்றாலே கோயில் திருவிழாக்களில் பிசியாக இருக்கும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கி போயுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒலி, ஓளி அமைப்பு தொழிலை நம்பி 25 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டாக வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடுவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானமின்றி அவதிப்படும் ஒலி, ஒளி தொழிலாளர்கள் ஒருவேளை உணவுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கி ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் - பிரேம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.