• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரும்பு தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம்? - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கரும்பு தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம்? - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

சிறுத்தைப்புலி

சிறுத்தைப்புலி

சேலம் கந்தம்பட்டி பகுதியில்,பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
சேலம் கந்தம்பட்டி பகுதியில்,பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.இப்பகுதியில் சிறுத்தை புலி போன்ற விலங்கை யார் பார்த்தாலும், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் கந்தம்பட்டி கோனேரிக்கரை பகுதியில் சிறுத்தைபுலி போன்ற ஒரு மிருகத்தை பார்த்ததாக பொதுமக்கள் கூறியதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அப்பகுதி பொதுமக்களுக்கும் அறிக்கை மூலமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read: காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்திய கணவர்... நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

அதில் சேலம் கந்தம்பட்டி கோனேரிக்கரை பகுதியில் உள்ள தனியார் கரும்பு தோட்டத்தில் சிறுத்தைபுலி போன்ற ஒரு மிருகத்தை பார்த்ததாக பொதுமக்கள் மூலம் தகவல் வரப்பெற்றதையடுத்து, அதனை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும், குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தாங்கள் வளர்க்கும் ஆடு,மாடு, நாய்,பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் ஏதேனும் சிறுத்தை புலி போன்ற விலங்கு தென்பட்டால் உடனடியாக வனத்துறையின் சேலம் தெற்கு வனசரக அலுவலரின் கைபேசி எண்ணிற்கு 9952390615 உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: