ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்வி அமைச்சரையே பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க சட்டம் இயற்ற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

கல்வி அமைச்சரையே பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க சட்டம் இயற்ற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

Marxist Communist Party : பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டியதில்லை என்றும் அதற்கு பதிலாக கல்வித்துறை அமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக நீடிப்பதை தவிர்த்து, கல்வித்துறை அமைச்சரையே வேந்தராக நியமிக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

  சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றுநாள் மாநில குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது என்றார்.

  ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கு இடையிலான முரண்பாடு பல மாநிலங்களில் உள்ளன என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ்.பின்புலம் உள்ளவர்கள் பல்கலைகழக வேந்தர்களாக நியமிக்கப்படுவது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டியதில்லை; அதற்கு பதிலாக கல்வித்துறை அமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டிய பாலகிருஷ்ணன், கால்நடைகளை காடுகளில் மேய்க்காமல் சென்னையிலா மேய்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். நீர்நிலைகளை காக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறிய அவர் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் நூறு ஆண்டுகால குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல என்றார்.

  Must Read : நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி

  நீதிபதிகள் அரசியல் சாசன விதிகளை மீறி உத்தரவை பிறப்பிக்கின்றனர். மத ரீதியான கொள்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் அரசியல் தலையீடு  உள்ளது; பணி ஓய்வு பெற்ற பிறகு கொளரவ பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் நீதிபதிகளின் செயல்பாடு உள்ளது என்று பாலகிருஷ்ணன் பகிரங்கமாக குற்றசாட்டினார்.

  செய்தியாளர் : திருமலை, சேலம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: CPM balakrishanan, Governor, University