சேலம் அருகே தடுப்பூசி முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

சேலம் அருகே தடுப்பூசி முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

சேலம் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளியில் தடுப்பூசி போடுவதற்கு அடிதடி தள்ளுமுள்ளு...

  • Share this:
சேலம் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளியில் தடுப்பூசி போடுவதற்கு திரண்ட மக்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் இந்த நோய் தொற்று பரவலை தடுக்க எதிர்ப்பு சக்தி பெற தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு  மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

எனினும், தடுப்பூசிக்கு ஒரு சில இடங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை சேலம் குகை பகுதியில் உள்ள கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளியில் திடீரென 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரேநேரத்தில் குவிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் அந்த பள்ளியில் கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. காவல்துறையினரும் பாதுகாப்புக்கு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also read: மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று கூறமுடியாது; சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர்: ப.சிதம்பரம்

மேலும், தடுப்பூசி முகாம் நடக்கும் பகுதியில் முண்டியடித்துக்கொண்டு முக கவசம் அணியாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குவிந்ததால், அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தடுப்பூசி போடுவதற்கு வரும் பொதுமக்களை சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலான பணிகளை அந்த பகுதி காவல்துறையினர் மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற தள்ளுமுள்ளு, கைகலப்பு போன்ற நிகழ்வுகள் தடுப்பூசி செலுத்தும் இடத்தில் நடைபெறாமல் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Esakki Raja
First published: