சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை.. ஒரே படுக்கையில் 3 தொற்றாளர்களுக்கு சிகிச்சை

சேலம் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஒரே படுக்கையில் 3 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

 • Share this:
  சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஒரே படுக்கையில் 3 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

  கொரோனா 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

  இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து சேலம் உருக்காலை வளாகப்பகுதியில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த மையத்திலும் படுக்கைகள் முழுமையாகி உள்ளது.

  இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஒரே படுக்கையில் 3 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் தரையில் அமர்ந்து ஆக்சிஜன் உதவி உடன் சிகிச்சை பெறுவதும் தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் சேலம் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று கொரேனா தொற்றாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: