Home /News /tamil-nadu /

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க ரூ.98 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை - சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க ரூ.98 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை - சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

கே.என்.நேரு

கே.என்.நேரு

Salem District : அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்ததை விட, தற்போது சொத்துவரி குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்வு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி உயர்த்தபட்டுள்ளது என்றும், அதிமுக ஆட்சிக்காலத்தில் வரி உயர்வு சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்ததை விட குறைவாக வரி உயர்த்தப்பட்டுள்ளதாவும், இதனை அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே அரசுக்கு குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்.

    மற்ற மாநிலங்ககளை விட தமிழகத்தில் வரி உயர்வு குறைவு என்றும் மக்களின் திட்டங்களுக்காக இதுபோன்ற வரிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வரி உயர்வின் மூலம் 83 சதவீத மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, அதிக அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் வணிக நோக்குடன் உள்ள கட்டிடங்களுக்கு இந்த வரி சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க 98 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆளுநரின் தேனீர் விருந்தில் திமுக புறக்கணிப்பு விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்விக்குப் பதிலலித்த கே.என்.நேரு, அதற்காகத்தான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என்றும் கூறினார்.

    Must Read : இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    ராமஜெயம் கொலை வழக்கு தற்போது கொங்கு மண்டலத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

    செய்தியாளர் - திருமலை, சேலம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: K.N.Nehru, Lake, Salem

    அடுத்த செய்தி