சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடந்த ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உயர்கல்வித் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் விசாரணை நடத்தப்படும் என கடந்த மாதம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி இந்த மூன்று பல்கலைக்கழகங்களிலும் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் சங்கீதா ஐஏஎஸ் மற்றும் அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பதவி உயர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அரசுக்கு புகார் மனுக்கள் வந்துள்ளன.
Also read: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
இது குறித்து ஆய்வு செய்ய உயர் கல்வித்துறையில் உள்ள ஐஏஎஸ் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என கடந்த 13ம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி சேலம் பெரியார் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர் கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா ஐஏஎஸ் மற்றும் அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். குழுவின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விபரங்களையும், ஆவணங்களையும் தர தயாராக உள்ளோம் எனவும், அரசுக்கும், முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், பெரியார் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.