ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உலக செவிலியர் தினம் - சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்!

உலக செவிலியர் தினம் - சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்!

உலக செவிலியர் தின கொண்டாட்டம்

உலக செவிலியர் தின கொண்டாட்டம்

International Nurses Day : உலக செவிலியர் தினத்தையொட்டி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தன்னலமற்ற சேவையை வழங்கிவரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இதன்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேலம் மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக செவிலியர் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள நைட்டிங்கேல் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

  தொடர்ந்து செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, தன்னலமற்ற சேவையை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற உறுதிமொழியினை ஏற்றனர்.

  Must Read : சிங்கப்பூர், மலேசியா போல் தமிழக பொருளாதாரத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்துவார் - அமைச்சர் சேகர் பாபு

  இந்த நிகழ்ச்சுயில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர் - திருமலை, சேலம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Nurses day, Salem