Home /News /tamil-nadu /

லாட்ஜில் நிர்வாண கோலத்தில் பெண் மர்ம மரணம் - கள்ளக்காதலனிடம் ஏற்காடு போலீஸ் விசாரணை

லாட்ஜில் நிர்வாண கோலத்தில் பெண் மர்ம மரணம் - கள்ளக்காதலனிடம் ஏற்காடு போலீஸ் விசாரணை

ஏற்காடு இளம்பெண் மரணத்தில் இளைஞர் கைது

ஏற்காடு இளம்பெண் மரணத்தில் இளைஞர் கைது

ஏற்காடு சுற்றுலா வந்த பெண்மணி மர்மமான முறையில் உயிரிழப்பு கொலையா தற்கொலையா என போலீஸார் விசாரணை

ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் பெண் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனிடம் போலீஸ் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச்  சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவரும், இவருடைய  அண்ணி  மஞ்சு  (வயது 26 ) இருவரும் ஏற்காடுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஏற்காட்டிற்கு வந்தவர்கள் தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர்.  இதனிடையே விஜய் இரவு மது அருந்திவிட்டு தனக்கு வரும் 23-ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் தங்களது நட்பை தொடர முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருவரும்  உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென இரவு மூன்று மணியளவில் விஜய் கண்விழித்து பார்க்கும் போது,  மஞ்சுவை காணவில்லை. அதிர்ந்து போன விஜய் தேடுகையில் கழிவறையில் நீர் கொட்டும் சத்தம் கேட்க மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் என எண்ணிக்கொண்டு விட்டுவிட்டு விட்தாகவும், வெகுநேரமாகியும் மஞ்சு வராததால் கழிவறையின் கதவை உடைத்து பார்க்கையில் மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இதை தொடர்ந்து விஜய் மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் கிடத்தி துணிகளை போட்டுவிட்டு தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

Also Read:  நம்ம யார் வம்புக்கு போறது இல்ல - போலீஸ் ஸ்டேஷனில் புலம்பிய மாடர்ன் பெண் சாமியார்

இதை தொடர்ந்து விஜய், ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாபதி மற்றும் பிரபு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் அண்ணன் தம்பிகள்.  அப்போது ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்துள்ளனர். பிரபுவுக்கும் மஞ்சுவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

அண்ணன் பிரபு, குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அப்போது தனிமை காரணத்தால் அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளது. அண்ணன் ஊரில் இல்லாததால் நட்பு தொடர அது கள்ளகாதலாக மாறியது. இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானதால் இருவரும் உல்லாசமாக இருக்க அடிக்கடி ஏற்காடு வருவது வாடிக்கையாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Also Read: பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. வீட்டின் அருகே வீசிச்சென்ற கொடூரம்

இதனிடையே கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிரபு தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி  மாவட்டம் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இருவரும் ஏற்காடு வந்த விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு தாம் எங்கே செல்வது என கேட்டு இருவருக்குள் நேற்றிரவு வாக்குவாதம் நடந்ததாக  கூறப்படுகிறது.

இதன் காரணமாக மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது  கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு  எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கொண்டு சோதனை மேற்கொண்டு டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபரை  காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Illegal affair, Illegal relationship, Murder, Salem, Suicide

அடுத்த செய்தி