ஆத்தூர் தனியார் லாட்ஜில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரி வாலிபரான கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கொல்லம்பட்டறை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் காலை சுமார் 40 வயது மதிக்கத் தக்க பெண்மணி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார் . அவருடன் தங்கிய கள்ளக்காதலன் தப்பியோடி விட்டார். இதுபற்றி ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் கொலையுண்ட பெண் கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் காஞ்சிராங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி சிலம்பரசி ( வயது40 ) என்பதும் கருப்பையா சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் சிலம்பரசி தனது 2 மகன், ஒரு மகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது, கள்ளக்காதலனுடன் ஆத்தூருக்கு வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப் படைபோலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட சிலம்பரசியுடன் வந்த கள்ளக்காதலன் , லாட்ஜில் தங்க வந்த போது தனது பெயர் ராஜா என்றும் அடரி களத்தூர் எனக்கூறி அறை எடுத்துள்ளார், அதனால் அந்த பெயரில் அடரி களத்தூரில் யாரும் உள்ளனரா ? அல்லது போலி பெயரை சொல்லி அறை எடுத்து தங்கினாரா ? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Also Read: வீடியோ காலில் வலை வீசிய வில்லங்க பெண்.. இளைஞரை நிர்வாணமாக்கி பணத்தை சுருட்டிய கும்பல்
இதில் கொலையான சிலம்பரசியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் இடம் வாங்குவதற்காக 6 பவுன் நகையை அடகு வைக்க செல்வதாக கூறி விட்டு சிலம்பரசி வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறியுள்ளனர், ஆனால் நகையை அடகு வைத்ததற்கான ரசீதோ, நகையோ லாட்ஜ் அறையில் இல்லை எனவே கொலையாளி சிலம்பரசியை கொன்று விட்டு நகையை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் சிலம்பரசியின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
சிலம்பரசியின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த துரை என்பவரது மகனான பொறியியல் பட்டதாரி இளங்கோ ( 22 ) என்பதும் இவர் சிலம்பரசியுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது, இதையடுத்து ஊரில் பதுங்கியிருந்த இளங்கோவை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பட்டதாரியான இளங்கோவிற்கும் கள்ளக்காதலி சிலம்பரசிக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் வெளியூர்களுக்கு சென்று லாட்ஜில் தனிமையில் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read: ப்ளூ பிலிம் ஞாபகம் இருக்கா.. பை பை பாபு.. சந்திரபாபு நாயுடுவை விளாசிய ரோஜா
இதனிடையே சம்பவத்தன்று இளங்கோவை காதலி சிலம்பரசி தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்ததாகவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதென்றால் தன்னை கொலை செய்து விடுமாறும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ கள்ளக்காதலியை கட்டிலில் தள்ளி சேலையால் கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு லாட்ஜ் அறையை பூட்டி விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு தப்பியோடியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இளங்கோவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.