சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக சேலம் வீரபாண்டி மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த மெகா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, தமிழகத்தில் இன்று 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 4 மணி வரை 12 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம் மூலம் 28 லட்சத்து 94 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் தடுப்பூசி போடப்படுவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எளிதாக தடுப்பூசி கிடைத்தபோது அதை பயன்படுத்த அப்போதைய அரசு தவறிவிட்டது. தற்போது மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்று அவர் கூறினார்.
Also read: உள்ளாட்சியில் வாரோம், நல்லாட்சி தாரோம்.. மதுரையில் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்கள் அதகளம்!
செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தடுப்பூசி குறைவாகவே வழங்கி வருகிறது. எனவே கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மூன்றாம் அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. குழந்தைகளைத் தாக்கும் என்ற வதந்தியால் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது மற்றும் தமிழகத்தில் புதிய வகை டெங்கு பாதிப்பு இல்லை. போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கடந்த ஆட்சியில் நடமாடும் மருத்துவ குழுவில் வாகன ஓட்டுநர்களை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர்கள் மீது நிச்சயம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.