• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.. சேலத்தில் பரபரப்பு!

நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.. சேலத்தில் பரபரப்பு!

நடத்தையில் சந்தேகம்..  நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.. சேலத்தில் பரபரப்பு!

நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.. சேலத்தில் பரபரப்பு!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் மீது கணவன் நடுரோட்டில் ஆசிட் வீசிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ் (வயது 50). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்த ரேவதி (வயது 47) என்பவருக்கும் கடந்த 20 வருடத்துக்கு முன்திருமணம் ஆனது. இவர்களுக்கு  மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரேவதிக்கும், யேசுதாசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.ஆனால் ஏசுதாஸ் மனைவி ரேவதி  நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரேவதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் மூலம் ரேவதி மற்றும் அவரது தாயார் ஆராயி ஆகிய இருவரும் இன்று புகார் கொடுக்க வந்து பின்னர் சேலம் டவுனில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ரேவதி தனது கணவர் கொடுமை செய்வதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் ரேவதியும் அவரது தாயாரும் பழைய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளனர்.

Also read: சென்னை ஆடிட்டரை கடத்தி கொடூரமாக கொலை செய்த கும்பல் - மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

அப்போது பின்னால் வந்த ரேவதியின் கணவர் இயேசுதாஸ் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து ஆசிட்டை மனைவி ரேவதி மீது கொட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். ஆசிட் வீசியதால் ரேவதியின் முகம் மற்றும் மார்பு பகுதி வெந்தது. இதனால் அலறி துடித்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ரேவதியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் சம்பங்கி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர் ஆசிட் வீசப்பட்டதால் ரேவதியின் தயாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தப்பி ஓடிய இயேசுதாசை கைது செய்ய தனிப்படை அமைத்து உள்ளார். இதில் உதவி கமிஷனர் வெங்கடேசன் காவல் ஆய்வாளர் சம்பங்கி, காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இயேசுதாசை  தேடி வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: