‘குழந்தை பிறந்த நேரம் சரியில்ல’: இளம் பெண்ணை வீட்டைவிட்டு துரத்திய கணவர் வீட்டார்!

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கு ஆபத்து என்றும் ஜோசியத்தில் இருப்பதாக கூறி கணவர் வீட்டார் கௌசல்யாவை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டும் விரட்டியடித்துள்ளனர்.

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கு ஆபத்து என்றும் ஜோசியத்தில் இருப்பதாக கூறி கணவர் வீட்டார் கௌசல்யாவை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டும் விரட்டியடித்துள்ளனர்.

 • Share this:
  குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜாதகத்தை காரணம் கூறி, கணவர் வீட்டார் வீட்டைவிட்டு விரட்டியடிப்பதாக இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டம்  கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுதூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் வெள்ளி தொழில் செய்து வருகிறார்.  இவருக்கும்  சேலம் உருக்காலை அருகே உள்ள கொலப்பட்டியை சார்ந்த ராஜா என்பவரின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கு ஆபத்து என்றும் ஜோசியத்தில் இருப்பதாக கூறி கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் கௌசல்யாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதோடு, அவ்வப்போது வீட்டை விட்டு அடித்து துரத்தியதாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளார் கெளசல்யா. இது தொடர்பாக ஒவ்வொரு முறையும் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார்  வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த கௌசல்யா இன்று தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

  இதையும் படிங்க: எதிர்பார்த்ததைவிட வேகமாக ஏற்படும் புவிவெப்பமடைதல்: எச்சரிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்கள்!


  தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து கவுசல்யா மேலும் கண்ணீர் மல்க கூறுகையில், “ இரு வீட்டார் சம்மதத்துடன்  திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தற்போது குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என கூறி தன்னையும் ,குழந்தையும் வேண்டாம் என அடித்துத் துரத்தி விட்டனர். எங்கள்  எதிர்காலம் என்ன வென்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

  மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் உதவி காவல் ஆணையரிடம் தொலைபேசியில் தகவல் தெரித்து, சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  மேலும் படிக்க: கொடைக்கானல் தனியார் அருவிகளுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்


  ஆனால் சம்பவ இடம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருப்பதால் அங்குள்ள மகளிர் காவல் நிலைத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்தும் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

   
  Published by:Murugesh M
  First published: