மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் வெறிச்செயல்.. காப்பாற்ற சென்ற உறவினர் லாரியில் சிக்கி உயிரிழப்பு!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் வெறிச்செயல்.. காப்பாற்ற சென்ற உறவினர் லாரியில் சிக்கி உயிரிழப்பு!

சேலம் அருகே குடும்பத் தகராறில் இளைஞர் ஒருவர் மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சேலம் சோளம்பள்ளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், வயது 32. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சொந்தமாக லாரி ஒன்றும் வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஜீவிதாவிற்கும் சரவணனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்த ஜீவிதா தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சென்றுவிட்டார். தொடர்ந்து பல முறை அழைத்தும் சரவணனுடன் சேர்ந்து வாழ மறுப்புத் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இதனிடையே சரவணனுக்கு மதுப்பழக்கம் இருப்பதன் காரணமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வப்போது உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதே போன்று நேற்று தனது மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன், தனது மனைவி ஜீவிதாவிடம்  குடும்பம் நடத்த வரச் சொல்லி  தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Also read: எஸ்.பி.வேலுமணி மீது புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் - பணம் கேட்டு மிரட்டுவதாக வேலுமணி சகோதரர் புகார்

அப்போது ஜீவிதாவின் தந்தை குப்பன் அருகே சென்று சரவணனை கண்டித்து பேசியுள்ளார். அப்போது ஜீவிதாவின் அத்தை மகன் ஜீவானந்தம் (வயது 26 ) என்ற இளைஞரும் உடன் இருந்துள்ளார்.

ஜீவிதாவின் தந்தை குப்பன் கண்டித்ததால், கோபமடைந்த சரவணன் தனது  லாரியை எடுத்து வந்து மாமனார் மீது ஏற்றிக் கொள்ள முயற்சித்துள்ளார்.

அப்போது வேகமாக வந்த லாரியை பார்த்த ஜீவானந்தம் தனது மாமா குப்பன் மீது லாரி மோதிவிடாமல், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் மாமா குப்பனை தள்ளிவிட்ட அதே நேரத்தில்  ஜீவானந்தத்தின் மீது லாரி ஏறியது.

லாரி ஏறியதில் படுகாயமடைந்த ஜீவானந்தத்தை பார்த்து அதிர்ச்சியான உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு  செல்லும் போது வழியிலேயே ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே லாரியை ஏற்றி கொலை செய்த சரவணனை, மடக்கிப் பிடித்த  அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: