சேலம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தைகளின் தாய் இறந்ததாக கணவர் ஆட்சியரிடம் புகார்!

சேலம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தைகளின் தாய் இறந்ததாக கணவர் ஆட்சியரிடம் புகார்!

தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி, கட்டாயத்தின் பெயரில் அந்தப் பெண்மணிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதியன்று தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

 • Share this:
  சேலம் அருகே தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தைகளின் தாய் இறந்ததாக கூறி, கை குழந்தைகளுடன் கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், செவிலியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, சுபலட்சுமி தம்பதியனருக்கு கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில்  இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பின்னர் பச்சிளம்  குழந்தைகளுடன் தாயார் வீட்டில் சுபலட்சுமி இருந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்பொழுது காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சித்ரா என்பவர் அவரது இல்லத்திற்கு வந்து தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி, கட்டாயத்தின் பெயரில் அந்தப் பெண்மணிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதியன்று தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் அன்று முதல் மூச்சுத்திணறலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23ஆம் தேதி சுபலட்சுமி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

  Also read: 108 ஆம்புலன்ஸில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: செவிலியர், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!

  தொடர்ந்து, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளுடன் கணவர் வருகை தந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தடுப்பூசி செலுத்திய சித்ரா என்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  செய்தியாளர் - திருமலை தமிழ்மணி
  Published by:Esakki Raja
  First published: