• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 8,000 கனஅடியாக குறைப்பு

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 8,000 கனஅடியாக குறைப்பு

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 8,000 கனஅடியாக குறைப்பு

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 8,000 கனஅடியாக குறைப்பு

ஜூலை 6-ம் தேதி காலை 9:00 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடி வீதமாக குறைக்கப்பட்டது.

  • Share this:
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் எட்டாயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

2021-2022 - ஆம் ஆண்டு காவேரி டெல்டா குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 12.06.2021 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டது . தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜுன் 12ம் தேதி 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு அன்றே மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும் என்றும், ஜூலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும் ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30,800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். நடப்பாண்டில் காவேரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் , நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்த, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Also read: இவர்கள் கொங்குநாடு கேட்கிறார்கள்.. ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார்.. என்னாவது தமிழகம்? திருநாவுக்கரசர் கேள்வி

அதன்படி, ஜீன் 12ம் தேதி காலை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் டெல்டா பாசனத் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, அன்று மாலை வினாடிக்கு  10 ஆயிரம் கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், ஜூன் 26-ம் தேதி மாலை 4 மணி முதல் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. ஜூலை 6-ம் தேதி காலை 9:00 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடி வீதமாக குறைக்கப்பட்டது.

டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு  12 ஆயிரம் கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மதியம் ஒரு மணியிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்:

நீர்மட்டம்   : 74.810 அடி.
நீர்இருப்பு :  36.979 டி.எம்.சி.
நீர் வரத்து :  வினாடிக்கு 2,535 கன அடியாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: