சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் சேலம்,
நாமக்கல்,
தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் எடப்பாடி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கிyum செல்கின்றனர்
இன்று கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 5000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 3000 ஆடுகள் விற்பனையானது சராசரியாக ஆடு ஒன்று ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
Must Read : நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
அதன்படி, இன்று மட்டும் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.