சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனையில் உள்ள  மகப்பேறு மற்றும் குடும்ப நலத்துறை ஓய்வின்றி சிறப்பாக செயலாற்றி வருவதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய சான்றாக உள்ளது.

  • Share this:
சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்கள் இங்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 27,182 வெளிநோயாளிகள் பயனடைந்து உள்ளனர். சராசரியாக 1,300 வெளிநோயாளிகள் ஒரு மாதத்திற்கு இந்த மருத்துவமனை மூலம் பயன் அடைந்து வருகிறார்கள். இதே போல் கடந்த  2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 18,564 உள் நோயாளிகள் பயனடைந்து உள்ளனர்.  இந்த மருத்துவமனையால் சராசரியாக 1,200 உள் நோயாளிகள் ஒரு மாதத்திற்கு  பயனடைந்து வருகின்றனர்.

Also read: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

குறிப்பாக கடந்த வருடம் இந்த மருத்துவமனையில்  13,140 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 2021ல் இருந்து பார்த்த பிரசவங்கள் 4508 கோவிட் பிரசவங்கள் 494. இதில் 494 பிரசவங்கள் 372 அறுவைசிகிச்சையாகவும் , 121 சுகப் பிரசவமாகவும் செய்துள்ளார்கள்.

இதனிடையே கேரளாவில் துணை வட்டாட்சியராக பணியாற்றும் அரசு அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பலராலும் வியந்து பேசப்படுகின்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. கடந்த 2018 ம் ஆண்டு  ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று,  தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்ட சப் கலெக்டராக (உதவி ஆட்சியர்) பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தர்மலாஸ்ரீயின் கணவர் தாமரைக்கண்ணன் சென்னையில் மருத்துவராக இருக்கிறார்.

மகப்பேறு காலத்தை முன்னிட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டிக்கு வந்துள்ளார் தர்மலாஸ்ரீ. பிரசவ தேதி நெருங்கி வந்ததும் தர்மலாஸ்ரீயை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் சொல்லி வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விரும்பாத தர்மலா ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 11ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்தது.

ஒரு மாவட்டத்தை ஆளும் உயர் பதவியில் இருந்தும் கூட, தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்காமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டது பொதுமக்களுக்கு வியப்பினையும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனையில் உள்ள  மகப்பேறு மற்றும் குடும்ப நலத்துறை ஓய்வின்றி சிறப்பாக  செயலாற்றி வருவதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய சான்றாகவும் அமைந்துள்ளது.
Published by:Esakki Raja
First published: