ஏடிஎம் கார்டு வந்திருக்கு ஓடிபி சொல்லுங்க.. அரைமணிநேரத்தில் மாயமான 10 லட்சம் - மூத்த குடிமக்களிடம் நூதன மோசடி

சேலம் நூதன மோசடி

அலட்சியமாக செயல்பட்டதால் வங்கியில் இருந்து 10 லட்சமும் வேறு கணக்குகளுக்கு மாறியுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

  • Share this:
சேலம் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் ஊராட்சி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது கணவர் அன்பழகன் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் கடந்த வாரம் கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டு சேலம் இரும்பாலை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அன்று வீட்டிலுள்ள தொலைபேசிக்கு எஸ்பிஐ மேட்டூர் வங்கி கிளையில் இருந்து ஊழியர் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. உங்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு வந்துள்ளதால் வங்கிக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும், இதற்கு முன்பாக வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் ஒடிபி எண்ணை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

Also Read: அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு

வங்கியில் இருந்து பேசுவதாக நம்பி, செல்போனில் வந்த வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஒடிபி எண்ணை கூறியுள்ளார். இதனையடுத்து அரை மணி நேரத்தில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக, ஆறு வங்கிக் கணக்குகளுக்கு மோசடி கும்பல் மாற்றியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக  வங்கி மேலாளரிடம் கூறியபோதும் அலட்சியமாக செயல்பட்டதால் வங்கியில் இருந்து 10 லட்சமும் வேறு கணக்குகளுக்கு மாறியுள்ளது. புகார் அளித்தவுடன்  விரைந்து நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கை முடக்கி இருந்தால் பணம் முழுமையாக சென்று இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read: '100 கோடி வங்கிக்கடன் வாங்கித்தரேன்.. 1.5 கோடி கமிஷன் கொடுங்க' - ஹரிநாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் மோசடி புகார்

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார். மேலும் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக கூறிக்கொண்டு வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல் திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: