Home /News /tamil-nadu /

நாட்டிற்கே வழிகாட்டி என்று கூறுகிறார் ஸ்டாலின்.. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட தரமாக இல்லை - எடப்பாடி பழனிசாமி

நாட்டிற்கே வழிகாட்டி என்று கூறுகிறார் ஸ்டாலின்.. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட தரமாக இல்லை - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை  வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டும் வருகிறது என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தபடி முறையாக வழங்கபடவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு  எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, சேலம் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் தருவதாக அறிவித்த நிலையில்  பொருட்கள் முழுமையாக  வழங்கப்படவில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பு எடுத்துச் செல்வதற்கு கட்டை பை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி கூறி  உள்ளனர். பொருட்கள் வாங்கி சென்ற பின்னர் பை வழங்குவது எதற்கு? பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை  வழங்குவது  கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டும் வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே நாங்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.

அதே நேரத்தில் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் நெகிழியில் உள்ளன. அதே போல் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஹிந்தி எழுத்துக்கள் பொரதிக்கப்பட்ட, வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது.  கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி, சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேட்டி சேலை  வழங்கப்படவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு   போடப்பட்டு உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

தற்போது தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக்  கல்லூரியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. திமுக அரசை பொறுத்தவரை விளம்பரம் மட்டுமே செய்து வருகிறது.
தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் தடுக்க தவறிவிட்டது. கொரோனா பாதுகாப்புக்கு ஏற்கனவே வாங்கி உபகரணங்களை தான் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

Also Read : ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக அரசின் ஆலோசனைகள் பெற்று இருந்தால் கொரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது.  தமிழக அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைத்து உள்ளனர். ஆனால் செயல்பாடுகள் இல்லை. திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது.
நாட்டிற்கு  வழிகாட்டியாக செயல்படும் அரசாங்கம் என்று கூறுகிறார் ஸ்டாலின்.  ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட தரமற்றதாக கொடுத்து வருகிறார்.

Read More : 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை - பள்ளிக்கல்வி துறை

வடகிழக்கு பருவமழை குறித்து ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே திமுக அரசு ஆய்வு செய்திருந்தால் கனமழை வந்தபோது தண்ணீர் உடனடியாக வடித்து இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் பொறியாளர்களை மாற்றிவிட்டு புதிய பொறியாளர்களின் நியமித்தனர்.  இவர்களுக்கு வடிகால் எங்கு உள்ளது என தெரியாததால் தான் நடவடிக்கை எடுக்க முடியாமல் தண்ணீர் தேங்கி நின்றது என்றும் தெரிவித்தார்.

Must Read : பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஆன்லைன் சூதாட்டம்  தடைக்கு  திறம்பட வாதாடததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ஆட. பணம் திருடிய வழக்கில் ரயில்வே ஊழியர் கைது செய்யப் பட்டிருக்கிறார். பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டம் குறித்து தடையானை பெற முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கிடப்பில் உள்ளது இதற்கு திமுக அரசு தான் காரணம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, Pongal Gift

அடுத்த செய்தி