Home /News /tamil-nadu /

ஓட்டு போட்ட மக்களுக்கு திமுகவினர் வேட்டு வைத்து விட்டனர் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஓட்டு போட்ட மக்களுக்கு திமுகவினர் வேட்டு வைத்து விட்டனர் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : அதிமுக கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  இன்று  சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, சங்ககிரி, தேவூர், கொங்கணாபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், எடப்பாடி, தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய நகராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து காலை முதல் இரவு வரை தொடர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

முதலில் பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில் பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், பனமரத்துப்பட்டி அதிமுக கோட்டை. அந்த காலத்திலேயே அமைச்சர் பெற்ற தொகுதி இதுவாகும்.
நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் தேவையான பணிகளை உங்களுக்கு செய்து தர முடியும். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் அடிப்படை வசதிகள் செய்து தர முடியும் என்றார்.

திமுகவினர் தேர்தலில் நோக்கத்தையே சிதைக்கிறார்களர் என்று குற்றம் சாட்டிய அவர், புரட்சி தலைவர் மற்றும் அம்மா இருந்தபோது தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. நான் இருந்த போதும் தேர்தல் நடந்தது. ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தினோம் ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.

652 கோடியில் கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வந்தோம் ஆனால் திமுகவினர் அவர்கள் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார்கள் பொய் கூறி வருகிறார்கள். அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள். சட்டமன்ற தேர்தலின் போது என்னென்ன தெரிவித்தார்கள் செய்தார்களா? 525 அறிவிப்புகள் ஸ்டாலின் அறிவித்தார். மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தந்தார்களா? தேர்தல் முடிந்து ஜெயித்து விட்டார்கள் அல்லவா? பிறகு மறந்து விடுவார்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஓட்டுப் போட்ட மக்களை மறக்கும் ஒரே கட்சி திமுக என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றனர். உயர்த்த வில்லை.  கல்விக் கடன் ரத்து செய்தார்களா?
நகை கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர். நாற்பத்தி எட்டு லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்கும். மற்றவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது. ஓட்டு போட்ட மக்களுக்கு இப்போது வேட்டு வைத்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

Read More : மணக்கோலத்தில் வந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

மேலும், அதிமுக கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களது பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஏழை குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். ஏராளமான திட்டங்களை அதிமுக தான் செய்து கொடுத்தது. தற்போது நடக்கும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Must Read : தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் - பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம்

தொடர்ந்து பேசிய அவர், கடந்தாண்டு பொங்கல் திருநாளில் ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினோம். திமுகவினர் கொடுத்த பொங்கல் தொகுப்பில் ஒன்றுமில்லை. இந்த பொங்கலை யாரும் மறக்க முடியாது. பொங்கல் தொகுப்பு மக்களுக்காக தரவில்லை. இதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வாறுஎடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதே போல் ஆட்டையாம்பட்டியிலும் பேசினார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, Local Body Election 2022

அடுத்த செய்தி