• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Diwali sale : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை : இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

Diwali sale : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை : இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

வீரகனூர் ஆட்டு சந்தை

வீரகனூர் ஆட்டு சந்தை

தீபாவளி பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தயில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம், ஆடு ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலை வீழ்ச்சி.

  • Share this:
சேலம்  மாவட்டம் வீரகனூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு சந்தை களைகட்டியது. ஒரே நாளில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால், ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய்  வரை விலை வீழ்ச்சியடைந்து விற்பனையானது.

சேலம், வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்  கால்நடை சந்தை மாவட்டத்திலேயே  மிகப்பெரிய சந்தையாகும், இந்தசந்தைக்கு சேலம் மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள  மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு  வரப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட  பல்வேறு  இன ஆடுகள், மாடுகள்  விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை என்பதால், இன்று வீரகனூரில்  நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை  விற்பனை  செய்வதற்காக ஏராளமான விவசாயிகள் சுமார் ஆயிரக்கனக்கான  ஆடுகளையும், 500க்கும்  மேற்பட்ட மாடுகளையும் விற்பனை  செய்ய கொண்டு வந்தார்கள்.

ஆடு, மாடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் இறைச்சி  கடைக்காரர்களும், தீபாவளிக்காக ஆட்டுக்கறி  வழங்கும்  சீட்டுக்களை  நடத்துபவர்களும் வந்தனர்.

அதிகாலை முதலே களைகட்டிய இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் ஆடுகளின்  தரத்திற்கேற்றவாறு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய்  வரை  விலை வீழ்ச்சிடைந்தது, மேலும் உயிர் எடையில் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள் 300 ரூபய்க்கு விற்பனையானது, இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Must Read : கிராமத்து மாணவியை சந்திக்க கார் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

பண்டிகை  காலங்களில் மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம்  நடைபெற்று வந்த  இந்த கால்நடை சந்தையில்  ஆடுகளின் விற்பனை மந்தமானதால் இரண்டு கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும்  விற்பனைக்காக கொண்டு வந்த ஆட்டிற்கு உரிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்காமல் திரும்ப கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: